கட்டுமானத் துறையின் மூலப்பொருட்களின் விலையை குறைக்குமாறு கோரிக்கை

சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு இணையாக கம்பி, நிறப்பூச்சு உள்ளிட்ட ஏனைய கட்டுமானத் துறையின் மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என நிர்மாணத்துறை சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று சனிக்கிழமை முதல் 300 ரூபாவால் குறைக்கப்பட்டு 2300 என்ற விலையில் விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சீமெந்து விலையை போன்று ஏனைய அனைத்து மூலப்பொருட்களும் குறைக்கப்பட வேண்டும் என நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரித்துள்ளார்.

இதற்கமைய, சந்தைக்கு சீமெந்து மூடை ஒன்றை 1,800 அல்லது 1,900 ரூபா அளவில் பெற்றுக்கொள்ள முடியும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நிர்மாணத்துறைக்காக பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலையையும் குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.