
கோணக்கலை தோட்ட நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
கோணக்கலை தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டது. சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்க்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.



