மாணவியின் உயிரை பறித்த தொலைபேசி

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 15 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின் தொலைபேசியை கொண்டு சென்றுள்ளார் இதன்போது, அதிபரிடம் அகப்பட்டு மாணவி மனவேதனை அடைந்துள்ள நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.