
இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டம்
இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும் , தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலத்தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில கௌரவ தலைவராகவுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் செந்தில் தொண்டமான் திருச்சியில் சென்ற வேளை அவருக்கு அச்சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத்தலைவர் ஒண்டிராஜ், மாநில செயலார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியிலுள்ள சின்ன மிளகுப்பாறையில் செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில் “தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதில்லை. கடல் எல்லையின் சிற்றம் காரணமாக சில நேரங்களில் எல்லைத்தாண்ட நேரிடுகிறது. அப்போது இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை அரசிடம் பேசி மீட்டுக் கொடுக்கும் பணியை கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். எங்களது பணி தொடரும். தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாற்றுடன் தொடர்புடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இலங்கையில் நடத்த நடடிக்கை எடுப்போம்” என கூறினார்.
