
இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் மோதல் : ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட சண்டையில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இரண்டு நபர்களும் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த 28 வயதான நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்த பொலிஸார், அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
