
நைட்ரைட் ஒக்சைட் வாயு கசிவால் 16 பேர் பலி
தென்னாபிரிக்காவின் ஜொஹான்ஸ்பேர்க் கிழக்கே உள்ள பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் சட்டவிரோத தங்கச் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பெண்களும் குழந்தைளும் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நைட்ரைட் ஒக்சைட் வாயு சிலிண்டர் ஒன்று பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் மக்கள் செறிவாக வாழும் ஏஞ்சலோ சேன்டி நகரிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் சட்டவிரோதமாக தங்கச் சுரங்க அகழ்வில் ஈடுபடுபவர்கள் இந்த வாயுவை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
