தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பறவை

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (டபுள் வாட்டில்ட் காசோவரி) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

 

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து எம்எச்179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று புதன்கிழமை இரவு  பறவைகள் கொண்டுவரப்பட்டன.

 

காசோவரி பறவை ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் 60 கிலோ எடை கொண்டது, இது பெரும்பாலும் “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பறவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இதில் இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையுமே இவ்வாறு பெறப்பட்டுள்ளன.

 

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.