
தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை விண்ணப்ப கால அவகாசம் நிறைவு
தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணைக்குழுவின் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த காலக்கெடு எந்த சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டது என பரீட்சைகள் ஆணைக்குழு தலைவர் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
