தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் புதிய உறுப்பினர்களான எம்.ஏ.பி.சி. பெரேரா மற்றும் அமீர் மொஹமட் பைஸ் ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்