
குப்பை எரித்ததால் வந்த விபரீதம்
வவுனியாவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் தீ பரவியுள்ளது.
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்ட போது குறித்த தீயானது மண்டபத்திலும் பரவியுள்ளது. தீ பரவுவதை அவதானித்த உத்தியோகத்தர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
