சீரற்ற வானிலையால் போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா நகரில் அமைந்துள்ள ரீகல் சினிமா அரங்கிற்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை பாரிய மரம் ஒன்றின் கிளை மின் கம்பம் மீது உடைந்து வீழ்ந்த நிலையில் மின்கம்பம் உடைந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நகரத்திற்கான ஒரு பகுதி மின்சாரம் தடைப்பட்டது.

மேலும், குறித்த வீதியை சீர்செய்யும் வரை இந்த வீதி ஊடாக வாகனங்கள் மற்றும் மக்கள் பயணிக்க நுவரெலியா போக்குவரத்து பொலிஸதர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் போக்குவரத்து பாதிப்பு