ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.