விசேட வைத்தியர்கள் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் யோசனை

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த அறிவித்துள்ளார்.

தற்போது அதிகரித்து வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமைச்சினால் கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் அறிவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

60 வயதில் ஓய்வு பெறுவதற்கு எதிராக விசேட வைத்திய நிபுணர் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.