பணம் மற்றும் நகைகள் திருட்டு : மூவர் கைது!

தங்க நகைகள் மற்றும் பணம்  ஆகியவற்றை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சந்தேகநபர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் நகைகள் மற்றும் அமெரிக்க டொர்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து கைக்குண்டு மற்றும் 24 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.