கதிர்காமத்தில் விபத்து : ஐவர் காயம்

கதிர்காம யாத்திரை சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.