மட்டக்களப்பில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன சமாதானச் செயத்திட்ட இணைப்பாளர் ரெபின்ஸ்சன் ஒருங்கிணைப்பில், நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் சனிக்கிழமை  இடம்பெற்றது

‘தொழில் தேடுபவரின் தலைமைக்கேற்ப ஒரு தொழில் அல்லது தொழில் கல்விச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்’ எனும் தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற பயிற்சிக் கருத்தரங்கில் மனித வள அபிவிருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களான அருளம்பழம் கருணாகரன், கருணாநிதி தீசன், நிதர்சனி விஜயகுமார் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.