
காதலியைத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நிறுத்தம்
தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து யுவதியை உதைத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளான கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ரணவர பகுதியை சேர்ந்த சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
