மகனின் நோயை தீர்க்க பூ பறிக்கச் சென்ற தந்தை உயிரிழப்பு

நவகத்தேகம கொங்கடவல பிரதேசத்தில் ஆற்றில் தாமரை மலர் பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொங்கடவல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தென்னகோன் முதியன்சலாகே சிறிசேனவே (வயது – 60) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது ஒரே பிள்ளையான 25 வயதுடைய மகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவதால், உள்ளூர் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக கொங்கடவல ஆற்றுக்குச் சென்றபோதே சேற்றில் மூழ்கி மரணித்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.