
உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான நற்செய்தி
கடந்த 2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 5000 மாணவர்களுக்கு, தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர வட்டி இல்லா கடனை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டதுக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
குறித்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 4 – 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் முழுநேரம் கல்வியில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
