
நாட்டில் 4 டெங்கு மரணங்கள்
இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 49,559 ஆக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 10,879 பேரும் மேல் மாகாணத்தில் 24,730 பேரும் பாதிக்கப்படுள்ளனர்.
அத்துடன், கடந்த ஜனவரி 2023 க்குப் பிறகு ஜூன் மாதத்தில் மாத்திரம் 9,916 டெங்கு தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அகற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
