உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான வாக்கெடுப்பு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் நிதி அமைச்சருக்கு வழங்குவதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் நேற்று காலை முதல் நடைபெற்ற விவாதத்தின் நிறைவில் நேற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி குறித்த வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்