தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம்

தையிட்டியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

தையிட்டியில் இராணுவத்தினரால் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்தும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் நடத்தவென நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்றுகூடுமாறு பொது மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்