பொது மக்களுக்கு விசேட சந்தர்ப்பம்

பேராதனைப் பல்கலைக்கழகம் தனது 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய (சனிக்கிழமை) நாளை திறந்த நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் வரலாற்றில் முதல் முறையாக பல்கலைக்கழக வளாகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆய்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவமிசத்தின் புராதன ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் வாய்ப்பளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்