சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி செலுத்தப்பட்ட கொடுமை

இந்தியாவில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்டு சிறுமி மயங்கி விளுந்ததன் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த சாதனா என்ற சிறுமிக்கே இவ்வாறு நாய்கடி ஊசி ஏற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தாதியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.

அதன்படி, மகளிற்கு உடல்நிலை சரியில்லாமையால் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு பரிசோதித்த வைத்தியர் மகளுக்கு சளி பிரச்சினை உள்ளதாக கூறி ஊசி ஏற்றவும், மாத்திரைக்கும் எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி மாத்திரை வாங்கிய பின்னர் ஊசி செலுத்தும் இடத்திற்கு சென்ற நிலையில் அங்கிருந்த தாதியர்கள் மருத்துவரின் பரிந்துரைக்கப்பட்ட ஆவணத்தை பார்க்காது மகளுக்கு 2 ஊசி செலுத்தப்பட்டதால் எதற்காக 2 ஊசி என்று தான் வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் செலுத்த வேண்டும் என்று கூறியமையால் தனது மகளுக்கு சளி பிரச்சினை என்று தான் கூறிய வேளை தாதியர் அலட்சியமாக பதில் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

அதற்கிடையில், தனது மகளிற்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளதாகவும் ஆகவே அலட்சியமாக சிகிச்சையளித்த தாதியர் மற்றும் பணியில் இருந்த வைத்தியர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்