யாழில் மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் காலாவதியான குளிர்பானங்கள்

யாழிற்கு முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விஜயம் மேற்கொண்டு கலந்துகொண்ட நிகழ்வில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்.உடுப்பிட்டி மகளீர் கல்லூரியில் நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானமே இவ்வாறு காலாவதி ஆனதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார். இதன் போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 வகை குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அந்த குளிர்பான போத்தல்களை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.