
யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி
மொனராகலை கலுவிட்டியா எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சேனை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த நபர் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானார்.
வெலிவத்தரோடை ரத்வனவனபிட்டிய பகுதியை சேர்ந்த 40வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
