நள்ளிரவில் தீக்கிரையான பேருந்து

மதுரங்குளி கரிகெட்டிய பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.