பேருந்து டயரில் சிக்குண்டு பெண் பலி
காலி பிட்டிகல பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமுகொட பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் பயணித்த பெண் கீழே இறங்கிய போது, அதே பேருந்தின் பின் டயரில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்