ஒரே நாளில் 07 சிறுமியர் துஷ்பிரயோகம்!

நாட்டில் நேற்று புதன் கிழமை காலை வரையான 24 மணிநேரத்தில் 07 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 17 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூஜாபிட்டிய, மருதானை, கொட்டவெஹெர, தும்மலசூரிய, பதவிய, மிட்டியாகொட, யட்டவத்த ஆகிய பிரதேசங்களில் 14, 15, 16 மற்றும் 17 வயது நிரம்பிய சிறுமியரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள 07 துஷ்பிரயோகங்களில் 04 பலவந்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்றும் காதல் தொடர்புகளினால் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.