யாழில் யுவதிகளின் நிர்வான புகைப்படங்களை பகிர்ந்த இளைஞர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்!

யாழில் புத்தூர் கலைஒளி கிராமத்தில் யுவதிகளின் நிர்வாண போட்டோவை பகிர்ந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் நுழைந்த 50ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் தீவைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியதுடன் வீடுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்தபோது அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுவேலி மருத்துவமனையிலும், இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பொலிஸார் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் யுவதிகளின் நிர்வான புகைப்படங்களை பகிர்ந்த இளைஞர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்!