மனித உரிமைகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் புதிய தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர் டு.வு.டீ தெஹிதெனிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் மேலதிக ஆணையாளர் சு.ஆ.யு.டு ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.