சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

காலாவதியாகும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து, நேற்று புதன் கிழமை அதிவிசேட வர்த்தமானி போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாக்கு வரும் வகையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி முதல் நாளை வரையில், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம், விநியோகிக்கப்பட்ட தினத்தில் இருந்து இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.