
மாணவி துஷ்பிரயோகம்: மதபோதகருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!
மாராவில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரையே அப்பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் படி மாரா பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
