
மட்டு. மகாஜன கல்லூரி 148ஆவது ஆண்டு விழா நடைபவனி!
மட் / மகாஜன பெண்கள் தேசிய கல்லூரியின் 148 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, காலை 8 மணியளவில் பாடசாலையின் முன்னால் அதிபர் திருமதி. கனகசிங்கம், மற்றும் பாடசாலையின் அதிபரினால் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம், பாடசாலை கீதம் என்பன இசைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து முன்னால் அதிபரினாலும் பாடசாலையின் முதல்வரினாலும் கேக் வெட்டப்பட்டது.
தொடர்ந்து அரசடி சுற்று வட்டத்திலிருந்து மேற்கத்தேய பேன்ட் வாத்தியங்கள், பாடசாலையினால் இது வரை காலமும் பெறப்பட்ட கேடயங்களுடன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் பழைய மாணவர்களுடன் நடைபவனியானது ஆரம்பமானது. குறித்த நடைபவனியானது காந்தி பூங்காவினூடாக வெபர் மைதானம் வரை சென்று மீண்டும் பாடசாலையை நோக்கி காலை 10 மணியளவில் வந்தடைந்தது.
அதன் பின்னர் பாடசாலை மண்டபத்தினுள் பாடசாலை தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியரினால் வரவேற்பு உரை, பாடசாலையின் முதல்வரினால் தலைமை உரை, பாடசாலையின் முன்னால் அதிபரும் பாடசாலையை பெண்கள் பாடசாலையாக மாற்றியவருமான திருமதி. கனகசிங்கம் ஓய்வு பெற்ற அதிபரினால் மாணவர்களுக்க சிறப்பு உரை மற்றும் ஆசிரியரியரினால் நன்றி உரையும் நிகழ்த்தப்பட்து.
நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வகுப்பு கொண்டாட்டங்களும் இடம்பெற்றது.























