உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

ஹட்டன் – நோர்வூட் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த  சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்டத் தொழிலாளி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்கிய தகவலுக்கமைய, பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சிறுத்தையின் சடலத்தை, ரந்தெனிகல கால்நடை வைத்திய பிரிவுக்கு கொண்டுசெல்ல, நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம்  கண்டறியப்படாத நிலையில், நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும், நோர்வூட் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்