
தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் உயிரிழப்பு!
-பதுளை நிருபர்-
நாவலப்பிட்டி – மொண்டிகிறிஸ்டோ தோட்டத்தில் தொட்டிலுக்காக பயன்படுத்தப்பட்ட சேலை கழுத்து பகுதியில் இறுகியதில் 9 வயதான சிறுவனொருவர் பலியானார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ள மற்றொரு குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது குறித்த சிறுவனின் கழுத்து இறுகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
