209 ஆவது மெதடிஸ்ததின நிறைவினை முன்னிட்டு பரிசளிப்பு நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்-

209 ஆவது மெதடிஸ்த தின நிறைவினை முன்னிட்டு புளியந்தீவு சேகரம் ஞாயிறு பாடசாலை மற்றும் திருச்சபை மக்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிக்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

இலங்கை மண்ணில் மெதடிஸ்த திருப்பணி ஆரம்பித்து 209 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு வைபவமும் புளியந்தீவு சேகரம் முகாமையாளர் அருட்பணி சுபேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது

இப்பரிசளிப்பு நிகழ்வில், அருட்பணியாளர்கள், மண்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர் திருமதி வளர்மதி ராஜ், புளியந்தீவு சேகரம் ஞாயிறு பாடசாலை மாணவர்கள், இதிருச்சபை மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.