
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுட்பட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் கடந்த நான்கு வருடங்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நான்கு வருடங்களின் பின் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் ஒழுங்கமைப்பில், பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிகாரியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அத்தியட்சகர் யூ. என் பி .லியனகே கலந்துகொண்டார்
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களின் வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






