கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி உதய நகர் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தரப்பினர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் கிளிநொச்சி – உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.