சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை பால்வெளியில் கண்டுபிடிப்பு!

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளையை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்டதில் இதுதான் மிகப்பெரும் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உயிரினங்கள் வசிக்கக்கூடிய பூமி, சூரிய குடும்பத்தை சேர்ந்ததாகும். சூரியன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இணைந்து பால்வெளி அண்டம் என்று அழைக்கப்படுகிறது.

பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் முன்பு கண்டுபிடித்திருந்தனர். நடைமுறையில் இருக்கும் இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு கருந்துளைகள் செயல்படுகின்றன. இதனை கடந்து செல்லும் எதனையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆற்றல் கருந்துளைக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரியனைக்கூட இவை உள்ளே இழுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை பால்வெளியில் கண்டுபிடிப்பு!

சூரியனை விடவும் 30 பில்லியன் மடங்கு பெரியதான கருந்துளை ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு பில்லியன் என்பது 100 கோடியாகும். பென்ட் லைட் எனப்படும் அறிவியல் முறை மற்றும் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கருந்துளை பூமியில் இருந்து பல மில்லியன் ஒளி ஆண்டுக்கு அப்பால் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஒளியாண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தூரமாகும். இதனை 9.46 லட்சம் கோடி கிலோ மீட்டர் என்று மதிப்பிட்டுள்ளார்கள். புதிதாக கண்டறியப்பட்டுள்ள கருந்துளை குறித்து விஞ்ஞானிகள் மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரமாண்ட கருந்துளை விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்