செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுச் சென்ற கொள்ளையர்கள்!
இந்தியாவில் டெல்லியில் சாலையில் நடந்து சென்ற ஜோடியிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், 100 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளமை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லியின் பர்ஸ் பஜாரில் உள்ள சாலையில் நடந்து சென்ற காதல் ஜோடியிடம், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர்துள்ளனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி அந்த ஆணின் சட்டை பையில் பணம் இருக்கிறதா என்று தேடியுள்ளார். அப்போது அவர்களிடம் வெறும் 20 ரூபாய் மட்டுமே உள்ளதை அறிந்த கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த 100 ரூபாயை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உடனடி வழக்குப்பதிவு செய்த டெல்லி பொலிஸார் 200 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து தேவ் வர்மா, ஹர்ஷ் ராஜ்புட் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ஸ்கூட்டர், 30 தொலைபேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்