தொண்டையில் உணவு சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்துள்ளது.

பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (வயது – 1) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் தாய் உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு குழந்தையின் தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து குழந்தை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்