கோர விபத்து: இளம் யுவதி பலி!

கொழும்பு இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, ​​அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புவக்பிட்டிய, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தினக்ஷி தில்ஷிகா (வயது – 23) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பேருந்தின் இடது பக்கம் யுவதியின் மீது மோதுண்ட நிலையில், அவர் தரையில் விழுந்துள்ளாா். இதனை அவதானிக்காது செலுத்தப்பட்ட பேருந்தின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரமும் அவா் மீது ஏறி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சாரதி பேருந்தை நிறுத்தாது செலுத்திய நிலையில், அதனை பின்தொடா்ந்து சென்ற பொலிஸார் தடுத்து நிறுத்தி சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்துள்ளனா்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்