சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அத்துமீறி அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தமக்கு விரும்பியவர்களுக்கு காணிகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கிளிநொச்சி கரடிபோக்கு சந்தையில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் முன்பாக சென்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பார்வைக்காக மகஜர் ஒன்றும் மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நேரில் சந்தித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரன் இவ்விடயம் தொடர்பாக தான் முழுமையான விசாரணை நடத்தி உரிய நேரத்தில் சிறந்ததோர் பதிலை வழங்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்