30ஆம் திகதி பங்குச்சந்தைக்கும் விடுமுறை

கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறமாட்டாது என கொழும்பு பங்குச் சந்தை விடுத்துள்ள அறிக்கையொன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதனை கருத்திற்கொண்டு, அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.