புதுமணத் தம்பதி உட்பட 6 பேரை வெட்டிக்கொன்ற அண்ணன்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அண்ணன் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை வெட்டிப் படுகொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கோகுல்பூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர யாதவ் தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த 23ஆம் திகதி 2வது மகனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது, இதனை தொடர்ந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் சூழ மணமக்கள் ஊர்வலமாக சென்றனர். அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவருமே ஆட்டம், பாட்டம் என சந்தோஷமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் மூத்த மகனான ஷிவ்வீர், புதுமணமக்கள் சோனு- சோனி, மைத்துனர் ஹவிலியா, இளைய சகோதரர் புல்லன் மற்றும் அவரது நண்பர் தீபக் என 5 பேரையும் வெட்டிக் கொன்றுள்ளார்.பின்னர் ஷிவ்வீர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இத்தாக்குதலில் ஷிவ்வீரின் பெற்றோர் மற்றும் மாமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, குடும்பத்தினரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீடே ரத்தமாக கிடந்துள்ளது. உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்த பொலிஸாரினால் இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன் கொலை தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.