பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது!

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டதுடன் மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளதாக மத்தியவங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் பணவீக்கம் 12.5 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.