மகாவலி கங்கையில் மூழ்கி மாணவன் மரணம்!

கண்டி, தென்னக்கும்புர பாலத்துக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். மற்றையவர் காப்பாற்றப்பட்டு, ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரும் கண்டியில் உள்ள பிரதான பாடசாலையில் கல்வி கற்கின்ற 15 வயதுடைய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.