துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
அம்பலாங்கொடை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
பலபிட்டிய ரன்தொம்பை பகுதியைச் சேர்ந்த அம்பலாங்கொடை பஸ் நிலையம் முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தின் வாடகை வண்டி சாரதியான மூன்று பிள்ளைகளின் தந்தை உஜித்சிறி டி சொய்சா (வயது – 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அம்பலாங்கொடையில் இருந்து தனது வீட்டிற்கு ரண்தொம்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 9எம்எம் துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்