மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் மு.தயாளனின் 6 நூல்களின் வெளியீட்டு விழா!
-மட்டக்களப்பு நிருபர்-
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்திய புலம்பெயர் எழுத்தாளர் மு.தயாளனின் “இதிகா- (நாவல்) பாகம் – I .மற்றும் பாகம்- Ii, “எதிரொலி” (சிறுகதை), “வின்னிமண்டேலாவின் வாக்கு மூலம்”- (வரலாறு), “இது புதிய ஆரம்பம்”- (நாவல்), “Hurdles”- (short story) ஆகிய ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் அரங்கேறியது.
பேராசிரியர் பால சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி பிரதம விருந்தினராகவும், பேராசிரியர் றமீஸ் அப்துல்லா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழர் பாரம்பரியத்துக்கமைய மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்புரையினையும், நூலாசிரியர் அறிமுகவுரையினையும் மகுடம் வி.மைக்கல் கொலின் நிகழ்த்தினார்.
இதன்போது வெளியீடு செய்யப்பட்ட நூல்களுக்கான அறிமுகவுரைகளை “இதிகா- 1” மற்றும் “இதிகா- 2” – எழுத்தாளர் ச.மணிசேகரனும், “எதிரொலி”- (சிறுகதை)- கவிஞர் கதிரவன் த.இன்பராசாவும், “வின்னிமண்டேலாவின் வாக்குமூலம்”- (வரலாறு)- பேராசிரியர் செ.யோகராசாவும், “இது புதிய ஆரம்பம்”- (நாவல்)- கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனும், “Hurdles”- (short story)- எழுத்தாளர் அ.ச.பாய்வாவும் நிகழ்த்தினர்.
அத்தோடு சிறுகதை மஞ்சரி சஞ்சிகைக்கான சந்தாப் பணமான 1000/- செலுத்தியோருக்கு இவ் 6 நூல்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவாக நன்றியுரையுடன் ஏற்புரையையும் இணைந்ததாக நூலாசிரியர் மு.தயாளன் ஆற்றினார்.
அத்தோடு நிகழ்வுகளை கவிஞர் அழகு தனு திறம்படத் தொகுத்து வழங்கினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்